Tuesday, July 4, 2023

பெற்றோருக்கான வழிகாட்டுதல் (பதிவு 4)

டீன் ஏஜ் குழந்தைகளை மேலாண்மை செய்வது எப்படி? 1 அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் 2. உங்கள் கையில் காத்தாடி இருந்தால் எவ்வளவு சுதந்திரம் கொடுப்பீர்களளோ அது போன்று கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள் இருப்பினும் காத்தாடி உங்கள் கைகளின் பிடியில் தான் இருக்கிறது 3. குழந்தைகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள் என்று அவர்கள் உணர வேண்டும் (எப்பொழுதுமே தவறு கண்டுபிடிக்கும் பெற்றோர் அல்ல) 4. சிறிது நேரம் அவர்களுடன் செலவிடுங்கள் (தரமான நேரம்) 5 . அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் உணர்வுகள் பற்றியும் மனம் விட்டு பேசுங்கள் (எப்பொழுதும் அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கும் பெற்றோர் அல்ல) 6. பேசும் பொழுது இப்பொழுதும் புத்திமதி சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுடன் பேசுவதை விரும்பாமல் ஒதுங்கி போக ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை நீங்கள் தெரிந்து கொண்டு சற்று ஆர்வம் காட்டுங்கள். உங்களுடன் அது சம்பந்தமாக அதிகம் கருத்து பரிமாற விரும்புவார்கள். தோளுக்கு மீறி வளர்ந்தால் தோழன் என்று சொல்லுவார்கள். அவர்களை தோழனாக தோழியாக பார்க்க ஆரம்பியுங்கள். நீங்கள் நல்ல தோழனாக தோழியாக இருக்க முயற்சி செய்யுங்கள் அவர்களுடைய நண்பர்களை உங்களுடைய நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்களே அவர்கள் வாழ்க்கைக்கு பொறுப்பு ஆக உணர வையுங்கள் 11. பிரச்சினையைத் தாக்குங்கள், தனிப்பட்ட முறையில் நபரை தாக்காதீர்கள் 12. அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள். அவர்களை முழுமையாக பேச அனுமதியுங்கள். 13. நமது கடந்த கால அனுபவங்களை வைத்து முடிவுகளில் குதிக்காதீர்கள்

No comments:

Post a Comment