Wednesday, July 19, 2023
பெற்றோர்கள் குழந்தைகளை கையாளும் ஸ்டைல் (Parenting Style)
குழந்தைகளை கையாளும் விதம் ஒவ்வொரு பெற்றோருக்கும் மாறுபடுகிறது. எந்த மாதிரியான ஸ்டைல் என்று பிரித்து பார்க்கலாம். நான்கு வகை உண்டு.
அதிகாரம் பண்ணுபவர்கள்
ஆதிக்க கொள்கை உடையவர்கள்
ஜனநாயக ரீதியான அணுகுமுறை
முழுவதும் பொறுப்பு எடுக்காமல் இருத்தல்
முதல் மாதிரி உள்ள பெற்றோர்கள் தங்கள் சொன்ன படிதான் குழந்தைகள் நடக்க வேண்டும் என்று மிரட்டி அதிகாரம் பண்ணிக்கொள்பவர்கள்.
மீறி நடந்தால் தண்டனை உண்டு
எப்போதும் குரல் உயர்ந்தே இருக்கும்
இப்படி வளர்க்க படும் குழந்தைகள் சற்று அதிகம் பொய் பேச வாய்ப்புண்டு.
இரண்டாவது மாதிரி உள்ள பெற்றோர்கள் சற்று கெடுபிடியாக இருந்தாலும், முதல் மாதிரி அளவிற்கு இருக்க மாட்டார்கள்.
மூன்றாவது மாதிரி உள்ள பெற்றோர்கள் நிலைமைக்கு ஏற்றாற்போல்
கெடுபிடியாகவும் விட்டுக்கொடுத்து இருப்பார்கள்.
நான்காவது மாதிரி உள்ள பெற்றோர்கள் குழந்தைகள் விருப்பப்படியே எல்லாவற்றையும் விட்டு விடுவார்கள். தங்களது ஆதிக்கத்தை செலுத்தவே மாட்டார்கள்.
முதல் மாதிரியும் கடைசி மாதிரியும் உள்ள பெற்றோர்களின் ஸ்டைல் குழந்தைகளை பாதிக்கும்.
இது பற்றி நிறைய பேச வேண்டி உள்ளது. முடிந்ததால் ஆடியோவில் பதிவிடுகிறேன் அல்லது வீடியோ பதிவு போடுகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment