Sunday, July 9, 2023
பதிவு 6 குழந்தைகளை கையாளுதல்
குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அதிகமாக சொல்லி வளர்க்க வேண்டும். எந்த தவறு செய்தாலும் தவறு என்று சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் எது சரியானது என்பதை அந்த அளவிற்கு சுட்டிக் காட்டுவதில்லை.
உங்களுடைய எதிர்பார்ப்புகளை தெரிவித்து விடுங்கள். அப்பா உன்னிடம் எதிர்பார்ப்பது இது தான். உன்னால் இப்படி நடந்து கொள்ள முடியும் என்று கூறி வாருங்கள்.
அநேக வீடுகளில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. குழந்தைகளிடம் செலவிடும் நேரமும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன். வாழ்க்கை முறையே மாறிக் கொண்டு வருகிறது.
குழந்தைகளிடம் பாடம், மார்க், என்பவைகளை தவிர மற்ற விஷயங்கள் பேசுவதும் குறைந்து கொண்டு வருகிறது இதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment