Tuesday, August 22, 2023

குழந்தையின் வாசிப்பு திறன்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வியில் வகிக்கக்கூடிய மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்று தங்கள் குழந்தையின் வாசிப்பு திறன் மற்றும் வாசிப்பு ஆர்வத்தை ஆதரிப்பதும் வளர்ப்பதும் ஆகும். குழந்தைகள் பெற்றோரின் மடியில் வாசகர்களாக்கப்படுகிறார்கள். சுமார் 75% மாணவர்கள் (5 முதல் 8 ஆம் வகுப்பு வரை) நல்ல திறமையான வாசகர்கள் அல்ல. குழந்தையின் வாசிப்புத் திறனை மேம்படுத்த பெற்றோர்கள் நிச்சயமாக உதவ முடியும். இந்த தலைப்பில் தகவல்களை ஆடியோவாக பின்னர் தருகிறேன்.

இன்று உங்கள் குழந்தையை நீங்கள் பாராட்டினீர்களா?

இன்று உங்கள் குழந்தையை நீங்கள் பாராட்டினீர்களா? இன்று உங்கள் குழந்தையை அரவணைத்தீர்களா ? குழந்தை செய்யும் நல்ல விஷயங்களை நாம் பாராட்டும் போதெல்லாம், ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்குகிறோம். பிள்ளைகள் பாராட்டுக்காக ஏங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் நாம் பாராட்டு, தெரிவிக்கும் போது, அவர்களுக்கு நேர்மறையான உணர்வுகளை கொடுக்கிறோம். அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டி ஒரு நாளில் எத்தனை முறை அவர்களை விமர்சித்திருக்கிறோம்? எத்தனை முறை குற்றம் சாட்டினோம்? இன்று உங்கள் மேலதிகாரியிடமிருந்து எத்தனை பாராட்டுகளைப் பெற்றுள்ளீர்கள்? இன்று உங்கள் மேலதிகாரியிடமிருந்து உங்களுக்கு எத்தனை விமர்சனங்கள் கிடைத்தன? பாராட்டுகளை எதிர்பார்த்தோம்.நீங்கள் ஒவ்வொரு நாளும் பாராட்ட ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்கலாம். வெகுமதிகளுடன் தாராளமாக இருங்கள் - உங்கள் அன்பு, அரவணைப்புகள் மற்றும் பாராட்டுகள் அற்புதங்களைச் செய்யலாம். உங்களது இந்த செயல்கள் விரைவில் நீங்கள் பார்க்க விரும்பும் நடத்தைகளில் அவர்கள் மாறி வருவதை காண்பீர்கள்

குழந்தை வளர்ப்பு குறிப்புகள்

குழந்தை வளர்ப்பு குறிப்புகள்: பெற்றோர்கள் சில நேரங்களில் பெற்றோர் போலவும், சில நேரங்களில் நண்பராகவும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு பெற்றோர் ஒரு விஷயத்திற்கு வேண்டாம் என்று சொல்ல விரும்பினால், அவர்கள் அதை கண்டிப்புடன் செய்ய வேண்டும். குழந்தை பிடிவாதமாக இருப்பதாலோ அல்லது சில ஆவேசங்கள் செய்வதாலோ, பெற்றோர் குழந்தையின் விருப்பத்திற்கு இணங்கினால், அவர்கள் அவனை / அவளை கட்டுப்படுத்தும் சக்தியை இழக்க நேரிடும். தாங்கள் ஏன் இல்லை என்று சொல்கிறோம் என்பதை பெற்றோர் கண்ணியமான முறையில் விளக்க வேண்டும். எளிய ஆம் அல்லது இல்லை வகை கேள்விகளைக் கேட்பதன் மூலம் குழந்தைக்கு புரிய வைக்கலாம் மற்றும் பதிலளிக்கவும் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கலாம்

கண்டிப்பான பெற்றோர்கள்

கண்டிப்பான பெற்றோர்கள்: கண்டிப்பு என்பது அவர்களது முறை. எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். அதிக எதிர்ப்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன. ஆனால் குழந்தைகள் சொல்வதை கேட்பதை அவ்வளவாக காதில் வாங்கி கொள்ள மாட்டார்கள். அவர்களது விதிகள் மாற்றப்படமாட்டாதது திறந்த மனதுடன் இருக்க மாட்டார்கள். விதிகள் கடைபிடிக்கப்படாதபோது தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. கொடுக்கப்படும் தண்டனைகளுக்கு காரணங்கள் விளக்கங்கள் கொடுக்க மாட்டார்கள். குழந்தை விதிகளை கடைபிடிக்க வில்லை என்பது மட்டுமே சொல்லப்படும்

Wednesday, July 26, 2023

பெற்றோர்கள் தான் முன்மாதிரி

குழந்தைகள் பெற்றோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். அப்படியே காப்பி அடிக்கிறார்கள் முதலில் நமக்கான உயர் தரத்தை நிர்ணயிப்போம். அவர்களுக்கு நாம் முக்கியமான முன்மாதிரியாக செயல் படுவோம் . குறைகளையும் ஏற்றுக் கொள்வோம். எந்த குழந்தையும் சிறு குறைகூட இல்லாமல் முழுமையான நல்ல குழந்தையாக இருக்க முடியாது. ஆனால் நாம் அவர்களை நல்ல குழந்தைகள் ஆக்குவதற்கு முயற்சி செய்வோம், அவர்களுக்கு கொடுக்கும் புத்திமதிகளை நாமும் பின்பற்றுவோம். அப்போது குழந்தைகள் தானாகவே பின்தொடர்வார்கள்.

Wednesday, July 19, 2023

பெற்றோர்கள் குழந்தைகளை கையாளும் ஸ்டைல் (Parenting Style)

குழந்தைகளை கையாளும் விதம் ஒவ்வொரு பெற்றோருக்கும் மாறுபடுகிறது. எந்த மாதிரியான ஸ்டைல் என்று பிரித்து பார்க்கலாம். நான்கு வகை உண்டு. அதிகாரம் பண்ணுபவர்கள் ஆதிக்க கொள்கை உடையவர்கள் ஜனநாயக ரீதியான அணுகுமுறை முழுவதும் பொறுப்பு எடுக்காமல் இருத்தல் முதல் மாதிரி உள்ள பெற்றோர்கள் தங்கள் சொன்ன படிதான் குழந்தைகள் நடக்க வேண்டும் என்று மிரட்டி அதிகாரம் பண்ணிக்கொள்பவர்கள். மீறி நடந்தால் தண்டனை உண்டு எப்போதும் குரல் உயர்ந்தே இருக்கும் இப்படி வளர்க்க படும் குழந்தைகள் சற்று அதிகம் பொய் பேச வாய்ப்புண்டு. இரண்டாவது மாதிரி உள்ள பெற்றோர்கள் சற்று கெடுபிடியாக இருந்தாலும், முதல் மாதிரி அளவிற்கு இருக்க மாட்டார்கள். மூன்றாவது மாதிரி உள்ள பெற்றோர்கள் நிலைமைக்கு ஏற்றாற்போல் கெடுபிடியாகவும் விட்டுக்கொடுத்து இருப்பார்கள். நான்காவது மாதிரி உள்ள பெற்றோர்கள் குழந்தைகள் விருப்பப்படியே எல்லாவற்றையும் விட்டு விடுவார்கள். தங்களது ஆதிக்கத்தை செலுத்தவே மாட்டார்கள். முதல் மாதிரியும் கடைசி மாதிரியும் உள்ள பெற்றோர்களின் ஸ்டைல் குழந்தைகளை பாதிக்கும். இது பற்றி நிறைய பேச வேண்டி உள்ளது. முடிந்ததால் ஆடியோவில் பதிவிடுகிறேன் அல்லது வீடியோ பதிவு போடுகிறேன்

Monday, July 17, 2023

உங்கள் குழந்தையின் சுயமரியாதையை அதிகரிக்கவும்

உங்கள் குழந்தையின் சுயமரியாதையை அதிகரிக்கவும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கண்களால் தங்களைப் பார்க்கும்போது குழந்தைகளாக தங்கள் சுய உணர்வை வளர்க்கத் தொடங்குகிறார்கள். உங்கள் குரலின் தொனி, உங்கள் உடல் மொழி மற்றும் உங்கள் ஒவ்வொரு வெளிப்பாடும் உங்கள் குழந்தைகளால் நகலெடுக்கப்படுகின்றன. ஒரு பெற்றோராக உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பாதிக்கின்றன. அதிகப்படியான கடினமான வார்த்தைகளை வெளியிடுவதையோ அல்லது வார்த்தைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதையோ தவிர்க்கவும். "என்ன ஒரு முட்டாள்தனமான காரியம்!" அல்லது "நீங்கள் உன் அண்ணனை விட அல்லது தம்பியை விட ஒரு குழந்தையைப் போல பண்றியே " போன்ற கருத்துக்கள் உடல் ரீதியான அடிகளைப் போலவே சேதத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து இரக்கத்துடன் இருங்கள். ஒவ்வொருவரும் தவறுகள் செய்கிறார்கள் என்பதையும், அவர்களின் நடத்தையை நீங்கள் நேசிக்காவிட்டாலும், நீங்கள் இன்னும் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதையும் உங்கள் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Tuesday, July 11, 2023

தினசரி வாசிக்கும் பழக்கம்

உங்கள் குழந்தைக்கு தினசரி வாசிக்கும் பழக்கம் உள்ளதா? இது மிகவும் அவசியமானது. இப்போதெல்லாம், மாணவர்கள் தேர்வுகள் என்று சொன்னால் மட்டுமே படிக்கச் ஆரம்பிக்கிறார்கள் அன்றாட வாசிப்பு பழக்கத்தை பலரும் மறந்து விட்டனர். தினசரி படிக்கும் பொழுது படிக்கச் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும். நேரத்தை அல்ல. தாங்கள் தேர்வு செய்திருக்கும் பகுதியில் எவ்வளவு படிக்கச் முடிந்தது என்ற முன்னேற்றத்தைப் பாருங்கள். அதிகம் பாடங்களை படிக்கச் வேண்டும் என்று தேர்வு செய்தால் முடியாமல் போகலாம் குறைவான பகுதியை தேர்வு செய்தால் அதை மட்டுமே முழு நேரமும் படித்து கொண்டு இருப்பார்கள் யதார்த்தமாக எவ்வளவு படிக்கச் முடியுமோ அவ்வளவு ஒதுக்கட்டும்

Sunday, July 9, 2023

பதிவு 6 குழந்தைகளை கையாளுதல்

குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அதிகமாக சொல்லி வளர்க்க வேண்டும். எந்த தவறு செய்தாலும் தவறு என்று சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் எது சரியானது என்பதை அந்த அளவிற்கு சுட்டிக் காட்டுவதில்லை. உங்களுடைய எதிர்பார்ப்புகளை தெரிவித்து விடுங்கள். அப்பா உன்னிடம் எதிர்பார்ப்பது இது தான். உன்னால் இப்படி நடந்து கொள்ள முடியும் என்று கூறி வாருங்கள். அநேக வீடுகளில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. குழந்தைகளிடம் செலவிடும் நேரமும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன். வாழ்க்கை முறையே மாறிக் கொண்டு வருகிறது. குழந்தைகளிடம் பாடம், மார்க், என்பவைகளை தவிர மற்ற விஷயங்கள் பேசுவதும் குறைந்து கொண்டு வருகிறது இதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்

Wednesday, July 5, 2023

பெற்றோருக்கான வழிகாட்டுதல் (பதிவு 5)

உங்கள் குழந்தைகளின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கவலைகளை உங்களிடம் வெளிப்படுத்த திறந்த மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள். அவர்கள் உன்னிப்பாக கேட்பதை ஊக்குவியுங்கள். அவர்களின் உணர்ச்சிகளை சரிதானா என்று புரிந்து கொள்ளுங்கள், தேவைப்படும்போது வழிக்காட்டுங்கள் மற்றும் ஆதரவை அளியுங்கள். எதையும் மறைக்காமல் உங்களிடம் சொல்லும் அளவிற்கு ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்குங்கள்

Tuesday, July 4, 2023

பெற்றோருக்கான வழிகாட்டுதல் (பதிவு 4)

டீன் ஏஜ் குழந்தைகளை மேலாண்மை செய்வது எப்படி? 1 அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் 2. உங்கள் கையில் காத்தாடி இருந்தால் எவ்வளவு சுதந்திரம் கொடுப்பீர்களளோ அது போன்று கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள் இருப்பினும் காத்தாடி உங்கள் கைகளின் பிடியில் தான் இருக்கிறது 3. குழந்தைகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள் என்று அவர்கள் உணர வேண்டும் (எப்பொழுதுமே தவறு கண்டுபிடிக்கும் பெற்றோர் அல்ல) 4. சிறிது நேரம் அவர்களுடன் செலவிடுங்கள் (தரமான நேரம்) 5 . அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் உணர்வுகள் பற்றியும் மனம் விட்டு பேசுங்கள் (எப்பொழுதும் அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கும் பெற்றோர் அல்ல) 6. பேசும் பொழுது இப்பொழுதும் புத்திமதி சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுடன் பேசுவதை விரும்பாமல் ஒதுங்கி போக ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை நீங்கள் தெரிந்து கொண்டு சற்று ஆர்வம் காட்டுங்கள். உங்களுடன் அது சம்பந்தமாக அதிகம் கருத்து பரிமாற விரும்புவார்கள். தோளுக்கு மீறி வளர்ந்தால் தோழன் என்று சொல்லுவார்கள். அவர்களை தோழனாக தோழியாக பார்க்க ஆரம்பியுங்கள். நீங்கள் நல்ல தோழனாக தோழியாக இருக்க முயற்சி செய்யுங்கள் அவர்களுடைய நண்பர்களை உங்களுடைய நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர்களே அவர்கள் வாழ்க்கைக்கு பொறுப்பு ஆக உணர வையுங்கள் 11. பிரச்சினையைத் தாக்குங்கள், தனிப்பட்ட முறையில் நபரை தாக்காதீர்கள் 12. அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள். அவர்களை முழுமையாக பேச அனுமதியுங்கள். 13. நமது கடந்த கால அனுபவங்களை வைத்து முடிவுகளில் குதிக்காதீர்கள்

பெற்றோருக்கான வழிகாட்டுதல் (பதிவு 3)

மாணவர்களில் அதிக சாதனையாளர் குறைந்த சாதனையாளர் மேலே உள்ளவற்றை தீர்மானிக்கும் காரணிகள்: இலக்குகளில் தெளிவு நண்பர்களின் செல்வாக்கு (Friends Influence) குடும்ப செல்வாக்கு (Family Influence) ஆசிரியர்களின் செல்வாக்கு (Teachers' Influence) சுற்றுச்சூழல் ஆதரவு அதிகப்படியான கட்டுப்பாடு அதிக சுதந்திரம் நுண்ணறிவு நிலை உணர்ச்சி பாதிப்புகள் உளவியல் காரணங்கள் எழுதும் திறன் வாசிக்கும் திறன் பகுத்தறியும் திறன்கள் குடும்ப வரலாறு (Family History_) உடல் நோய் மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மது அருந்தும் பெற்றோர்

பெற்றோருக்கான வழிகாட்டுதல் (பதிவு 2 )

ஒவ்வொரு பெற்றோரின் தற்போதைய உடனடி சவால்கள்: 1. குழந்தையை கல்வியில் சிறப்பாக செயல்படச் செய்வது 2. நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல நடத்தைகளை வளர்ப்பது பெற்றோர்களே, எனது முதல் முன்னுரிமை : நீங்கள் முதலில் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் குடும்பத்தின் முதுகெலும்பு. ஒவ்வொருவரும் அவரவர் தங்கள் சொந்த வேளைகளில் பிஸியாக உள்ளனர். உங்கள் உடல்நலம் குறித்து விசாரிக்கவும், உங்களை கவனித்துக் கொள்ளவும் யாருக்கும் நேரம் இல்லை. உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் உங்கள் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வேலை-வாழ்க்கை சமநிலையை நிர்வகிக்க வேண்டும் நீங்கள் மன அழுத்தத்தை நன்கு நிர்வகிக்க வேண்டும் மற்றவர்களால் தூண்டப்படும் உணர்ச்சிகளை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் தேவைப்படும் இடங்களில் உதவிகளை ஆதரவைப் பெற நீங்கள் தயங்கக்கூடாது